அன்பான வேண்டுகோள்

                                                                   
     
                                                           
 அன்பான உறவுகளே...!! இங்கு பதியப்படும் திருமணிமாலை, திருமணிகோவை போன்ற பாடல்களுக்கு நேரடியான அர்த்தம் கொள்ளாதீர்கள். இது சித்தர்பாடல்கள் போல் மறைபொருள விளக்கும் மகத்துவம் நிறைந்த பாடல்கள் எனவே, படித்து ... படித்து... உள்ளர்த்தம்  புரிந்து உள்ளொளி மேலோங்கி வாழ்க்கையில் மகத்துவம் பெறவே இந்த பாடல்கள். இந்த பாடல்களுக்கு அர்த்தம் புரிந்தவர்கள் கீழே கருத்துக்கள் என்பதில் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்..

பணிவிடை பெயர் விளக்கம்

                                                               
ஆத்தி பணிவிடை - பன்றி படையல்
மச்ச பணிவிடை - மீன் படையல்
கீரிசுட்டான் பணிவிடை - சேவல் படையல்
நடையன் பணிவிடை - ஆட்டு கிடாய் படையல்

மனோன்மணி மாலை- 13 To 16

மனோன்மணி மாலை- 9 To 12

மனோன்மணி மாலை- 4 To 8

மனோன்மணி மாலை- 1 To 3

மனோன்மணி அகவல்

திருமணிக் கோவை- 43 To 46

திருமணிக் கோவை- 38 To 42

திருமணிக் கோவை- 34 To 37

திருமணிக் கோவை- 31 To 33

திருமணிக் கோவை- 27To 30

திருமணிக் கோவை-22 To 26

திருமணிக் கோவை- 18 To 21

திருமணிக் கோவை-15 To 17

திருமணிக் கோவை- 10 To 14

திருமணிக் கோவை- 5To 9

திருமணிக் கோவை- 1To 4

திருமணி மாலை பாடல்- 29 To 32

திருமணி மாலை பாடல்- 24To 28

திருமணி மாலை பாடல்- 19To 23

திருமணி மாலை பாடல்- 14 To 18

திருமணி மாலை பாடல் 9To 13

திருமணி மாலை பாடல் 5 To 8

திருமணி மாலை பாடல் 4

                                                    -திருமணி மாலை பாடல்-4

ஏது துயரம் வந்தாலும் எளியோர் வலியோ ரானாலும்
வாது சூது செய்தாலும் வறுமை கொடுமையானாலும்
போது மனவே எட்டெழுத்தை போற்றித்துதித்த போதுனக்கு
தீது வினைகள் தானகற்றும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல்- 3

                                                 -திருமணி மாலை பாடல்-3

குட்டம் குறை நோய் வாதபித்தம் சூன்மம் சயநோய் நீராம்பல்
வெட்ட கரப்பன் வெடி சூலை மேக பாண்டு பீனிசமும்
மட்டிலடங்கா நோய் தனக்கு மருந்தே திருமணி அறிந்திடவே
திட்டமுடனே நோய்தீர்க்கும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல் 2

                                                         - திருமணி மாலை பாடல்- 2

பழிகள் கொலைகள் செய்தாலும் பாவம் அநேகம் நினைத்தாலும்
விழிகண் குருடு கால்கைகள் முடக்கம் இருந்தால் மனமுருகி
அழியாதிருக்கும்  எட்டெழுத்தை அன்பாய் துதிக்க வினைதீர்த்து
தெளிவாய் மனதில் அருள்புரியும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல்-1

                                                     -திருமணி மாலை பாடல்- 1

ஈரேழ் உலகம் பதினாலும் எறும்பு முதலாய் எவ்வுயிர்க்கும்
பாரோர் பணியும் சிவன்மாலும் படைக்கும் பிரம்மதேவருக்கும்
ஆராய்ந்திருக்கும் தபோதனர்க்கும் அஷ்ட வசுக்கள் முனிவருக்கும்
சீராய் இறங்கி அருள்புரியும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல் காப்பு

                                                     
இந்த திருமணி மாலை பாடல்களை "எப்போதும்வென்றான்" என்னும் திருத்தலத்தில் தெய்வமாய் குடியிருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திரு சோலையப்பசுவாமிகள் இயற்றி அருளியது.
                                                                  -காப்பு-

கருமணி உண்டு சொற்காயாம்பு மேனிக் கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்திலே உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவிகோடி சூரியப்ரகாச குரவி உண்டு
திருமணி உண்டு  ஹரி ஓம்நமோ ராமானுஜாய என்ற தெய்வமுண்டே...

திருப்புளி ஆழ்வார்

இது வரை நீங்கள் கவனித்திராத அருள்காட்சி...

நேர்த்திகடன்,

நோயுற்ற பக்தர்கள் ஆத்திசாமியிடம் தாங்கள் குணமடைய வேண்டி நேர்ந்து கொண்டு, பின் குணமடைந்த பிறகு காணிக்கையாக காலணிகளை சாமிக்கு செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு சிறு பகுதி..

வழிபாட்டு முறை

'' கருமணி உண்டு சொற்காயம்பு மேனி கருணை உண்டு 
ஒருமணி உண்டு  என் உள்ளத்திலே உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவி கோடி சூரியப்ரகாச குரவி உண்டு
திருமணி உண்டு ஹரி ஓம் நமோ ராமானுஜாய என்ற தெய்வம் உண்டு''

கேள்வி :நமது கோவிலில் பெரியசாமியாக சங்கு சக்கரத்துடன் கூடிய திருமேனி கொண்ட பெருமாளை வழிபட்டு வருகிறோம் ஆனால் திருமணி மாலையில் ''சிவகடாட்சம்'' என்று வ்ருகிறதே..!! அப்படியானால் நமது கோவில் சைவ வழிபாட்டு கோவிலா ??

பதில்::  நமது குலதெய்வம் ஐந்துவீட்டு சுவாமிகளின் வழிபாட்டு முறையினை ஆராய்ச்சி செய்தோமானால் ''சித்தர்''களின் வழிபாட்டு முறை போல்  குரு சிஷ்ய பரம்பரை கொண்ட கோவிலாக உள்ளது. கோவிலில் தெய்வங்களுக்கு உருவமில்லை, (பெரியசாமிக்கு சுமார் 1955 ம் ஆண்டு வாக்கில்தான் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது) ஆகம விதிகள் எதுக்கும் கட்டுபடாத புரட்சிகரமான கருத்துகளை வழிபாட்டு முறைகளாக கடைப்பிடிக்கும் கோவிலாக இருந்து வருகிறது. வைணவ கோவில் ஆனால் வைணவ வழிபாட்டு முறை கிடையாது, சரி சைவ வழிபாடு இருக்கான்னா..? அதுவும் இல்லை, இரண்டு வழிபாட்டு முறைகளுக்குள்ளும் முறைபடுத்த இயலாத வழிபாட்டு முறையை கொண்டுள்ளது, இங்கு பணிவிடை பூஜைகளின் போது பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது, பொதுவாக பெண்கள் மாதவிலக்கின் போது கோவிலுக்குள் செல்ல கூடாது என்பது ஐதீகம் ஆனால் நமது கோவிலில் எந்த விலக்கும் இல்லை, கருவறை செல்லலாம், அதே போல் கர்பமான காலங்களிலும் பெரும்பாலான கோவில்களுக்கு பெண்கள் செல்வதில்லை ஆனால் நமது கோவிலில் கர்பமான பெண்களுக்கு இரண்டு பிரசாதம் அதாவது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து  வழங்கப்படுகிறது, எல்லா கோவில்களிலும் பூசாரி தட்டில் பணம் வாங்குவார்கள் ஆனால் இங்கு அண்ணாவி (பூசாரி) எந்தவிதமான அன்பளிப்புகளையும் வாங்குவதில்லை, பக்தர்கள் அனைவரும் ஒரே விதமாகவே நடத்தப்படுகிறார்கள், பெரியசாமி அவதாரத்தை நிறைவு செய்யும் போது ''பஞ்சபூதங்களுடன்  கலந்துவிட்டார்'' சித்தர்கள் இறப்பதில்லை சமாதியாவார்கள், வள்ளலார் கூட பஞ்சபூதங்களுடன் கலந்ததாக வரலாறு, இன்னும் சற்று உன்னிப்பாக கவனித்தோமானால்  முகமது நபி , புத்தர் போன்றோர்கள் வழிபாட்டு முறைகள்  கூட இதை அனுசரித்தே இருக்கிறது. அதனால் நமது கோவில் வழிபாடு சித்தர்கள் கோவிலாக ஆதி காலத்தில் இருந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது,  ''கருமணி'' என்பதற்க்கு மூலாதாரம் என்றும்  பொருளுண்டு அதேபோல் '' சிவகடாச்சம்'' என்பதற்க்கும், திருமணி மாலையில் உள்ள அத்தனை பாடல் வரிகளுக்கும் பல அர்த்தங்கள் உள்ளடங்கியே உள்ளன, அதை முழுவதும் புரிந்தவர்கள் அதற்க்கு விளக்கம் தந்தால் இன்னும் முழுமையாக இருக்கும், பூஜையின் போது நடைமுறைகள் சித்தர்கள் உபதேசம் செய்யும் விததிலேயே இருக்கிறது. 


குலதெய்வம்

குலதெய்வம் என்றாலே ஒரு சாதியினர் மட்டுமோ அல்லது ஒரு வகையினர் மட்டுமோ வணங்கி வருவார்கள் இதுதான் நடைமுறை ஆனால் முன் காலத்திலேயே நமது குலதெய்வம் பெரியசாமி ஆன்மீகத்தில் பிராமணர்களின் அடக்கு முறையை எதிர்த்து மற்றவர்களுக்கு சுயமரியாதையை ஏற்ப்படுத்தியவர்🤔 அதனால்தான் நமது கோவிலில் சாதி பாகுபாடு இல்லாமல் ''அனைத்து சாதியினரும் குலதெய்வமாக'' வழிபட்டு வருகிறோம். நமது குலதெய்வம் நல்ல சமுதாயத்தின் முன்னோடியான வாழ்க்கை முறை வழிகாட்டி...

குதிரைசாமி

குதிரைசாமி, தீயவற்றை உடனடியாக அழித்து நம்மை காக்கும் துடியான தெய்வமான  ஆத்திசாமியின் வாகனம். இவரிடம் வேண்டுதல் வைத்தால் நம் கோரிக்கை உடனடியாக நிறைவேற உதவி புரிகிறார்..